லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்.. நயன்தாரா வெளியிட்ட அறிக்கை
சினிமா நட்சத்திரங்களுக்கு பட்டம் என்பது அவர்களது ரசிகர்கள் அல்லது மற்ற சினிமா பிரபலங்களால் தரப்படுவது. அப்படி கிடைத்த டைட்டிலை சிலகாலத்திற்கு பிறகு வேண்டாம் என அறிவித்த நடிகர்களும் இருக்கிறார்கள்.
அஜித், சிம்பு, கமல் என பல நடிகர்கள் இப்படி செய்து இருக்கிறார்கள். தற்போது அந்த லிஸ்டில் நடிகை நயன்தாராவும் இணைந்து இருக்கிறார்.
லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் வேண்டாம்
லேடி சூப்பர்ஸ்டார் டைட்டில் வேண்டாம், தன்னை நயன்தாரா என்று மட்டும் அழைக்கும்படி தற்போது நயன்தாரா கேட்டிருக்கிறார்.
"நீங்கள் பலரும் எனக்கு லேடி சூப்பர்ஸ்டார் என்று அன்புடன் அழைத்து வாழ்த்தியிருக்கிறீர்கள். உங்கள் பேராதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் இனிமேல் என்னை நயன்தாரா என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்."
"ஏனெனில் என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது - ஒரு நடிகையாக மட்டுமல்ல, ஒரு தனிநபராகவும்."
"பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைத்தான், ஆனால் சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையிழந்து, நம் கலைத்தொழிலிருந்து உங்கள் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும்."
இவ்வாறு நயன்தாரா கூறி இருக்கிறார்.


இமயமலையால் அடித்த ஜாக்பாட்.. பாகிஸ்தானில் தங்கச் சுரங்கம்- கோடிக்கணக்கில் கிடைக்க போகுது! IBC Tamilnadu

SBI JanNivesh SIP முதலீட்டு திட்டம்.., குறைந்தபட்சமாக ரூ.250 முதலீடு செய்து ரூ.7 லட்சம் பெறலாம் News Lankasri
