நானும் ரவுடி தான் திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள்.. நடிகை நயன்தாரா வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ
நடிகை நயன்தாரா
போடா போடி படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நானும் ரவுடி தான். இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

மேலும் இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, ராதிகா சரத்குமார், பார்த்திபன், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் இவர்களுடன் இணைந்து நடித்திருந்தார்கள்.
இந்த படம் நடிகை நயன்தாராவின் சினிமா வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் மூலம் தான் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இடையில் காதல் மலர்ந்தது.
நெகிழ்ச்சி வீடியோ
இந்நிலையில், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த “நானும் ரவுடி தான்” திரைப்படம் வெளிவந்து 9 ஆண்டுகள் ஆன நிலையில், நயன்தாரா அவரது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோவுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், "எனது வாழ்க்கையை மாற்றும் வரப்பிரசாதமாக அமைந்த படம் ‘நானும் ரௌடிதான்’. கடந்த 9 வருடங்களுக்கு முன்பு, இப்படம் வெளிவந்தபோது மக்களிடம் இருந்து புதிய அன்பை அனுபவித்தேன். அதற்கு என்றும் நன்றி கடன் பட்டுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri