உயிருக்காக நடிகை நயன்தாரா செய்த உணர்ச்சிப்பூர்வ செயல்.. வைரலாகும் வீடியோ
நயன்தாரா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக புகழின் உச்சத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நயன்தாரா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல முன்னணி நடிகர்களுடன் 20 ஆண்டுகளாக சினிமாவில் டாப் நடிகையாக ஜொலித்து கொண்டு இருக்கிறார்.
இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து 2022 - ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் உயிர் மற்றும் உலக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நயன்தாரா ஷூட்டிங் இல்லாத நேரத்தில் மகன்கள் உடன் தான் எப்போதும் செலவிட்டு வருகிறார். மேலும் வெளிநாட்டுக்கு சென்றாழும் மகன்களை உடன் அழைத்துக்கொண்டு தான் செல்கிறார்.
வைரல் வீடியோ
குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ள நயன்தாரா அப்போது அவர்களுடன் எடுக்கப்படும் வீடியோ மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது தன்னுடைய மகன் உயிருடன் இருக்கும் அழகான வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,