நயன்தாரா - விக்கியின் புது வீடு பற்றி கசிந்த தகவல்! Interior-க்கு இத்தனை கோடி செலவு செய்கிறார்களா
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டனர். பல வருட காதலுக்கு பிறகு ஜூன் 9ம் தேதி அவர்கள் திருமணம் செய்துகொண்ட நிலையில் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றனர்.
அங்கிருந்த அவர்கள் திரும்பிய நிலையில் தற்போது நயன்தாரா மும்பையில் அட்லீ - ஷாருக் கூட்டணியில் ஜவான் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார்.
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் விக்கி - நயன் இருவரும் வாங்கி இருக்கும் ஒரு சொகுசு பிளாட் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
பல ஆயிரம் சதுர அடியில் இரண்டு அடுக்குகளில் இருக்கும் அந்த பிளாட்டின் இன்டீரியர் செய்ய ஒரு பிரபல நிறுவனத்திற்கு 25 கோடி ரூபாய் கொடுத்துள்ளாராம் நயன்தாரா. பல முன்னணி பாலிவுட் பிரபலங்களில் வீடுகளுக்கு interior செய்த நிறுவனம் தான் அது என்றும் கூறப்படுகிறது.