மீண்டும் 39 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா.. இது ரசிகர்களை கவர்ந்த ஜோடி ஆச்சே
நயன்தாரா
லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் கடைசியாக மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் என்றால் அது ஜவான் தான்.

இதன்பின் வெளிவந்த எந்த படமும் நயன்தாராவிற்கு கைகொடுக்கவில்லை. மேலும் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
மீண்டும் இணைந்த ஜோடி
இந்த நிலையில், மலையாளத்தில் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஆம், நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் டியர் ஸ்டுடென்ட்ஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.
இதற்கான அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. டியர் ஸ்டுடென்ட்ஸ் திரைப்படத்தை ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப் குமார் என இருவர் இயக்கி வருகிறார்கள்.

இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக நிவின் பாலியுடன் இணைந்து நடிக்கவுள்ளார் நயன்தாரா. ஏற்கனவே லவ் ஆக்ஷன் டிராமா எனும் திரைப்படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆட்சியில் பங்கு தராவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் - மாவட்ட காங்கிரஸ் தீர்மானம் IBC Tamilnadu