பாகுபலி வெப் சீரிஸில் நடிகை நயன்தாரா - வெளியான அறிவிப்பு
ராஜமவுலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான படம் ‘பாகுபலி’.
பாகுபலி முதல் பாகத்திற்கு முன் நடந்ததை வைத்து, தற்போது புதிதாக வெப் சீரிஸ் ஒன்று உருவாகவுள்ளது.
பாகுபலியில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தின் இளம் வயது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த வெப் சீரிஸை எடுக்கின்றனர்.
சுமார் 9 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸ், ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் இளம் வயது சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகை சமந்தாவை, படக்குழு அணுகியது.
ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டதால் தற்போது முன்னணி நடிகையான நயன்தாரா அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக பிரபல LetsOTT GLOBAL நிறுவனம் அறிவித்துள்ளது.
BIG NEWS: #Nayanthara makes her grand OTT entry with the magnanimous project 'Baahubali before the beginning' for NETFLIX.
— LetsOTT GLOBAL (@LetsOTT) July 16, 2021
The web series will go on floors by September 2021. pic.twitter.com/0QeWI8c06p