சென்சேஷன் ஹீரோவிற்கு அக்காவாக நடிக்க போகும் நயன்தாரா.. யார் அந்த நடிகர் தெரியுமா
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அன்னபூரணி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அக்காவாக நடிக்க போகும் நயன்தாரா
இந்நிலையில், நயன்தாரா நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தனது காதல் கணவர் இயக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா ஹீரோவின் அக்கா ரோலில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

லியோ படத்தை தயாரிக்க லலித் குமார் தான் இப்படத்தையும் தயாரிக்கிறாராம். ரூ. 60 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, LIC - லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம்.
சென்சேஷன் கூட்டணி
லவ் டுடே எனும் மாபெரும் சென்சேஷன் ஹிட் படத்தை கொடுத்துவிட்டு தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க இளம் பாலிவுட் நடிகையிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்கின்றனர்.

மேலும் பிரதீப்பின் அக்காவாக நடிக்க நயந்தாராவை கமிட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan