நயன்தாரா படத்தில் பிரபு தேவா.. பல ஆண்டுகளுக்கு பின் நடக்கும் விஷயம்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா
நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர். இவருடைய நடிப்பில் சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளிவந்து வெற்றிபெற்றுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து கனெக்ட், காட் ஃபாதர் மற்றும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் தெலுங்கில் ஜெயம் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் காட் ஃபாதர் படத்தில் கதாநாயகியாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படம் மலையாளத்தில் வெளியான லூசிஃபர் படத்தின் ரீமேக் ஆகும். மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த பிரியதர்ஷினி கதாபாத்திரத்தில் தான், நயன்தாரா நடித்து வருகிறார்.
மீண்டும் பிரபு தேவாவுடன் இணையும் நயன்தாரா
இந்நிலையில், இப்படத்தில் நடன இயக்குனராக பிரபு தேவா கமிட்டாகியுள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிறப்பு பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளாராம் பிரபு தேவா.
இதன்முலம் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரபு தேவா மற்றும் நயன்தாரா ஒரே படத்தில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.