நயன்தாராவின் மேக்கப்பை கலாய்த்த நடிகை மாளவிகா மோகனன்.. கடுப்பான ரசிகர்கள்
நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் அடுத்ததாக கோல்ட் திரைப்படம் வெளியாகவுள்ளது.
இதை தொடர்ந்து கனெக்ட், நயன்தாரா 75, இறைவன், ஜவான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நயன்தாராவை கலாய்த்த மாளவிகா
இந்நிலையில், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உயரத்தில் இருக்கும் நடிகை நயன்தாராவை, பிரபல நடிகை மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கலாய்த்து பேசியுள்ளார்.
ஒரு திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் நடிகை ஒருவர் உயிர் போகும் நேரத்தில் மருத்துவமனையில் முழு மேக்கப் போட்டுகொண்டு நடித்திருந்தார். கமெர்ஷியல் படமாகவே இருந்தாலும் அது எப்படி நடக்கும் என்று நடிகை மாளவிகா மோகனன் கூறியிருந்தார்.
இதை கவனித்த ரசிகர்கள் ராஜா ராணி படத்தில் நயன்தாரா நடித்த காட்சியை தான் மாளவிகா கலாய்த்துள்ளார் என்று கூறி வருகிறார்கள். இன்னும் சில நயன்தாராவின் ரசிகர்கள் கடுப்பாகி மாளவிகா மோகனனை திட்டி வருகிறார்கள்.
இரண்டாவது திருமணம் குறித்து நடிகை மீனாவே சொன்ன பதில்- என்ன கூறியுள்ளார் பாருங்க