நயன்தாரா வாடகைத்தாய் சர்ச்சை.. ஹாஸ்பிடலை மூட அரசு அதிரடி நோட்டீஸ்! விசாரணை குழு அறிக்கை இதோ
வாடகைத்தாய்
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் முடிந்து நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் வாடகைத்தாய் மூலமாக பெற்றது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அது பற்றி அரசு விசாரணை குழு அமைத்து அந்த மருத்துவமனையில் விசாரணை நடத்தியது.
அவர்கள் தற்போது விசாரணை அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் மீது எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை.
உறவினர் இல்லை
நயன்தாரா - விக்கி ஜோடிக்கு குழந்தை பெற்றுக்கொடுத்தவர் உறவினர் இல்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முன்பு இருந்த விதிமுறைப்படி உறவினர் அல்லாதவர் கூட வாடகைத்தாயாக இருக்கலாம், அவரது செலவினங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். அதைத்தான் இவர்கள் பின்பற்றி இருக்கின்றனர்.
குடும்ப மருத்துவரை கண்டுபிடிக்க முடியல
நயன் தாராவின் குடும்ப மருத்துவர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தான் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக ஹாஸ்பிடல் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. ஆனால் அந்த குடும்ப மருத்துவர் குறிப்பிட்ட மருத்துவமனையை மூடிவிட்டு வெளிநாடு சென்றுவிட்டாராம்.
அவரை மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என விசாரணை குழு தெரிவித்து இருக்கிறது.
ஹாஸ்பிடலை மூட நோட்டீஸ்
வாடகைத்தாய் மூலம் நயன் - விக்கி ஜோடி குழந்தை பெற்ற ஹாஸ்பிடலில் சரியாக ஆவணங்கள் இல்லை, முறையாக வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்கிற காரணத்திற்காக 'ஏன் தாற்காலிகமாக செயற்கை கருத்தரித்தல் மையத்தை மூட கூடாது' என அரசு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மேலும் நயன்தாரா - விக்கி ஜோடி 2016ல் பதிவு திருமணம் செய்ததாக ஹாஸ்பிடல் கொடுத்த ஆவணத்தின் உண்மை தன்மை சரிபார்க்கப்பட்டு விட்டது என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.