Breaking: நயன்தாரா - விக்னேஷ் சிவன் இன்று மாலை நிச்சயதார்த்தம்! Exclusive தகவல்
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வரும் நிலையில் எப்போது திருமணம் செய்ய போகிறார்கள் என்று தான் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர். அதற்கு தற்போது பதில் கிடைத்துவிட்டது.
பூஜை
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பல கோவில்களுக்கு சென்று விசேஷ பூஜைகள் செய்து வந்தனர். இன்றும் அவர்கள் காளிகாம்பாள் கோவிலில் பூஜை செய்திருக்கும் ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆனது.
சென்னை மேயராக பதவி ஏற்றிருக்கும் பிரியாவும் அங்கு பூஜையில் இருக்கும் ஸ்டில்கள் இன்று மதியம் முதல் இணையத்தில் வைரலாகி கொண்டு இருந்தது.
நயன்தாரா பரிகார பூஜைகள் அனைத்தும் செய்து முடித்த பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும் என உறுதியாக இருந்தார். கொரோனா லாக்டவுனில் கோவில்கள் மூடப்பட்டதால் அவர்களது திருமண திட்டம் தொடர்ந்து தள்ளிப்போய் வந்தது குறிப்பிடத்தக்கது.
நிச்சயதார்த்தம்
இந்நிலையில் இன்று மாலை நயன் - விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம் எளிய முறையில் நடைபெற இருக்கிறது. அதன் புகைப்படங்கள் விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கலாம்.



என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
