நயன்தாரா - விக்கி திருமணத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு! உள்ளே செல்ல அழைப்பிதழ் மட்டுமின்றி இதுவும் தேவை
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு நாளை பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற இருக்கிறது. சென்னை மகாபலிபுரம் அருகில் இருக்கும் ஒரு சொகுசு நட்சத்திர ஹோட்டலில் இந்த திருமணம் நடைபெற இருக்கிறது.
சினிமா துறை நட்சத்திரங்கள் பலரும் திருமணத்திற்கு வருவார்கள் என்பதால் அங்கு பாதுகாப்பு அதிகம் போடப்பட்டு இருக்கிறது. சுமார் 200 விஐபி-க்கள் வருவார்கள் என்பதால் ஒரு சில புது பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்களாம்.
தகவல் படி விருந்தினர்கள் உள்ளே செல்ல அழைப்பிதழ் மட்டும் போதாது, திருமணத்திற்கு முந்தைய நாளே ஒரு ஸ்பெஷல் கோடு அவர்களுக்கு அனுப்பப்படும். அதை காட்டினால் தான் திருமணம் நடைபெறும் இடத்திற்கு உள்ளேயே செல்ல முடியும் என கூறப்படுகிறது.
விக்கி - நயன் திருமண நிகழ்வின் வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை ஒரு முன்னணி ஓடிடி நிறுவனம் வாங்கி இருப்பதாக தகவல் ஏற்கனவே வந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri
