நயன்தாரா திருமண சர்ச்சைகளுக்கு பதிலடி! நெட்பிலிக்ஸ் நிறுவனம் கூறிய அதிரடி பதில்

By Parthiban.A Jul 21, 2022 08:40 AM GMT
Report

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9ம் தேதி சென்னை மகாபலிபுரம் அருகில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் ரஜினி, ஷாருக் கான், விஜய் சேதுபதி. அனிருத், சூர்யா உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

திருமண வீடியோ உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும், திருமணத்திற்கான செலவை அந்த நிறுவனம் தான் செய்தது என்றும் செய்தி வந்தது.

நயன்தாரா திருமண சர்ச்சைகளுக்கு பதிலடி! நெட்பிலிக்ஸ் நிறுவனம் கூறிய அதிரடி பதில் | Nayanthara Vignesh Shivan Wedding Netflix Tweets

சர்ச்சையும் விளக்கமும்

திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து விக்னேஷ் சிவன் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட தொடங்கினார். அதனால் நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்குகிறது, விக்கி - நயனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள் எனவும் நேற்று செய்தி பரவியது.

இந்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக தற்போது நெட்பிலிக்ஸ் ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருக்கிறது. விக்கி - நயன்தாரா புகைப்படங்களை பதிவிட்டு திருமண வீடியோ தங்களிடம் தான் வர போகிறது என தெரிவித்து இருக்கின்றனர்.

 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US