நயன்தாரா ஆசைப்பட்ட பொருளை வாங்க துடியாய் துடிக்கும் விக்னேஷ் சிவன், அப்படி என்ன பொருள் அது தெரியுமா!
நயன்தாரா இன்று தென்னிந்தியா முழுவதும் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின். இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றது.
இதில் மிக முக்கியமான படம் என்றால் அவருடைய காதலன் இயக்கத்தில் நடித்துள்ள காத்து வாக்குல இரண்டு காதல் படம் தான்.
இப்படத்தின் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி இருந்த போது அவரை கௌரவிக்கும் விதமாக துபாய் அரசு அவருக்கு கோல்டன் விசா வழங்கியது.
இதற்கு விஜய் சேதுபதி துபாயில் ஒரு தொழிலாளியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்து இன்று உச்சத்தை தொட்டுள்ளார் என்பதை கௌரவிக்கும் விதம் தான்.
இதை அறிந்த நயன்தாரா எப்படியாவது அந்த கோல்டன் விசாவை வாங்கிவிட வேண்டும் என்று துடியாக துடித்து வருகின்றாராம்.
அதற்கு விக்னேஷ் சிவனுடம் தன்னால் முடிந்ததை செய்தே ஆகவேண்டும் என்று தன் காதலிக்காக கோல்டன் விசா வாங்க போராடி வருகின்றாராம், கோலிவுட் முழுவதும் தற்போது கோல்டன் விசா மோகம் தான்.
அப்படி என்ன கோல்டன் விசா பயன் என்றால், நீங்கள் எந்த பெர்மிஷனும் இல்லாமல் துபாய் சென்று முதலீடு செய்யலாம், படிக்கலாம் போன்ற பல சலுகைகள் உள்ளது, அதோடு அங்கு நீங்கள் இடம் வாங்கினால், நிறைய சலுகையும் இதன் மூலம் கிடைக்கும்.