GOAT படத்தில் நடிக்க மறுத்த முன்னணி நடிகை.. உண்மையை உடைத்த வெங்கட் பிரபு
GOAT
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் செப்டம்பர் 5 - ம் தேதி வெளிவந்த படம் GOAT.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் பல 90ஸ் முன்னணி நட்சத்திரங்களான பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மோகன் ஆகியோரை வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாக மாஸ் காட்டி வருகிறது.
விஜய் படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பல ட்விஸ்ட்டை GOAT படத்தில் வைத்து அஜித் ரசிகர்களை கவரும் வகையில் சில சீன்களை அமைத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார் வெங்கட் பிரபு.
வெங்கட் பிரபுவின் பேட்டி
இந்த நிலையில், GOAT படத்தில் சினேகா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் வேறு நடிகையை தேர்வு செய்ததாக வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதில், "வில்லு மற்றும் பிகில் படங்களில் விஜய்யுடன் நடித்த நயன்தாராவை தான் GOAT படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும், அம்மாவாகவும் நடிக்க வைக்க தேர்வு செய்தேன். ஆனால், சில காரணத்தினால் நயன்தாரா இந்த படத்தை தேர்வு செய்யவில்லை" என்று கூறியுள்ளார்.

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri

வெள்ளத்தில் அடித்து வந்த 20 கிலோ தங்கம் - மக்கள் வலைவீசி தேடிய நிலையில் நடந்தது இதுதான்! IBC Tamilnadu
