விக்கியுடன் படம் பார்க்க வந்த நயன்தாரா! துணிவா, வாரிசா?
துணிவு மற்றும் வாரிசு படங்கள் கடந்த 11ம் தேதி திரைக்கு வந்த நிலையில், இரண்டு படங்களுக்கும் ஒரே மாதிரி விமர்சனங்கள் தான் கிடைத்து வருகிறது. மேலும் தியேட்டர் பங்கீடும் முன்பு சொன்னது போல சம அளவிலேயே இருந்தது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்கள் நேரடியாக மோதுகிறார்கள் என்பதால் பிரபலங்கள் பலரும் படம் பார்த்துவிட்டு சமூக வலைத்தளங்களில் போட்டோ வெளியிட்டு வருகின்றனர்.
தியேட்டரில் நயன்தாரா
இந்நிலையில் இன்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தியேட்டருக்கு படம் பார்க்க வந்திருக்கிறார்கள். அவர்கள் துணிவு படம் தான் பார்த்திருக்கிறார்கள். அதன் போட்டோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
மேலும் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் துணிவு படத்தை பற்றி பதிவிட்டு இருக்கிறார். அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/ea8d8460-0848-4c2f-81c4-096ede70fec1/23-63c1303661273.webp)