நீங்க முஸ்லிம்.. இப்படி ஏன் நடிச்சீங்க: வில்லங்கமான கேள்விக்கு நஸ்ரியா கொடுத்த சூப்பர் பதில்
மதத்தை குறிப்பிட்டு நிருபர் ஒருவர் கேட்ட வில்லங்கமான கேள்விக்கு நஸ்ரியா அளித்த பதில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
நஸ்ரியா:
நடிகை நஸ்ரியா தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமானவர் தான். தமிழில் அவர் நேரம், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.
முன்னணி நடிகையாக இருந்த நேரத்திலேயே நஸ்ரியா நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதன் பின் நடிப்பதை நிறுத்தி இருந்த அவர் தற்போது மீண்டும் பிசியாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.
வில்லங்கமான கேள்வி
Ante Sundaraniki என்ற தெலுங்கு படத்தில் நஸ்ரியா நானி ஜோடியாக நடித்து இருக்கிறார். அதில் அவர் லீலா தாமஸ் என்ற கிறிஸ்தவ பெண்ணாக நடித்துள்ளார்.
அந்த படத்தின் பிரெஸ் மீட்டில் நிருபர் ஒருவர் "இஸ்லாமிய பெண்ணாக இருந்துகொண்டு, லீலா தாமஸ் என்ற கிறிஸ்தவ பெண் ரோலில் ஹிந்து ஆணுக்கு மனைவியாக நடித்து இருக்கிறீர்கள். இதுபோன்ற ஸ்கிரிப்ட்டில் நடிக்க ஏன் முடிவு செய்தீர்கள்' என கேட்டார்.
அதற்க்கு கூலாக பதில் கூறிய நஸ்ரியா, "எனக்கு கதை பிடித்து இருந்தது. ஒரு ஸ்பார்க் இருந்தது அதனால் ஒப்புக்கொண்டேன். கிறிஸ்தவ பெண்ணாக நடிப்பதற்கு நான் எதுவும் செய்யவில்லை. கதாபாத்திரத்தை புரிந்துகொண்ட நடித்தேன் அவ்வளவுதான்" என விளக்கம் கொடுத்தார்.