நடிகை நஸ்ரியா திடீரென காணாமல் போனது ஏன்.. பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகை நஸ்ரியா மற்றும் பஹத் பாசில் ஜோடிக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். கியூட்டான ஜோடி என அவர்கள் இருவரையும் ரசிகர்கள் வர்ணிப்பதுண்டு.
நஸ்ரியா சமீபத்தில் சினிமாவில் மீண்டும் படுபிஸியாக நடித்து வந்தார். அவர் மலையாளத்தில் நடித்து இருந்த Sookshma Darshini படம் பெரிய ஹிட் ஆனது.
ஆனால் அதன் பின் திடீரென நஸ்ரியா எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்தார். பல மாதங்களாக இன்ஸ்டாவில் போட்டோ கூட எதுவும் வெளியிடவில்லை.
நஸ்ரியா பதிவு
இந்நிலையில் நஸ்ரியா இன்ஸ்டாவில் தற்போது போட்டிருக்கும் ஒரு பதிவு ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
"Emotional wellbeing and personal challenges உடன் போராடி வருவதாக அவர் கூறி இருக்கிறார். இது மிகவும் கடினமான பயணம், அதில் இருந்து சரியாகி மீண்டு வர முயற்சிக்கிறேன்" என அவர் கூறி இருக்கிறார். ஆனால் இதற்கு என்ன காரணம் என அவர் தெரிவிக்கவில்லை.
நஸ்ரியாவுக்கு என்ன நடந்தது, பஹத் உடன் பிரச்சனையா அல்லது வேறு எதாவது நடந்ததா என ரசிகர்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.
அவரது நீண்ட பதிவை பார்த்ததும் அவர் அதிர்ச்சியாக எதோ அறிவிக்கிறாரோ என முதலில் ஒரு நொடி அதிர்ச்சி ஆகிவிட்டோம் எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்திருக்கின்றனர்.


253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
