சமந்தாவின் முன்னாள் கணவரை வைத்து வெங்கட் பிரபு இயக்கி வரும் படத்திற்கு தொடர் சிக்கல்!
வெங்கட் பிரபு
இயக்குநர் வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து பல முக்கிய நடிகர்களுடன் பணிபுரிவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் நடிகர் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கும் NC22 திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நாக சைதன்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான இரண்டு திரைப்படங்கள் Thank You மற்றும் Laal Singh Chaddha பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இந்த இரண்டு திரைப்படங்களும் தோல்வியடைந்துள்ளது.

NC22
இதனால் NC22 திரைப்படத்தின் தயாரிப்பாளர் நாக சைதன்யாவின் இப்படத்தை தயாரிக்க தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. மேலும் அப்படத்தில் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்க ஒப்பந்தமான நிலையில் அவரும் இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமந்தா - சித்தார்த் இடையேயான காதல்! திருமண பூஜை வரை சென்றதா?