போதை பொருள் வழக்கில் ஷாருக் கான் மகன் பற்றி வந்த அதிரடி தீர்ப்பு

By Parthiban.A May 27, 2022 11:00 AM GMT
Report

பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கடந்த வருடம் அக்டோபரில் சொகுசு கப்பலில் போதை பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். அவருடன் மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டு Narcotics Control Bureau (NCB) தீவிர விசாரணை நடத்தியது.

சில மாதங்களுக்கு பிறகு ஆர்யன் ஜாமினில் வெளிவந்தார். அதற்கு முன்பு அவரது ஜாமீன் மனு பல முறை நிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பல முன்னணி வக்கீல்களை வைத்து பெரிய போராட்டத்திற்குப் பிறகு தான் ஷாருக் கான் மகனை ஜாமீனில் எடுத்தார்.

போதை பொருள் வழக்கில் ஷாருக் கான் மகன் பற்றி வந்த அதிரடி தீர்ப்பு | Ncb Drops Charges Against Aryan Khan

விடுதலை

இந்நிலையில் தற்போது Narcotics Control Bureau இந்த வழக்கின் சார்ஜ் ஷீட்டை பைல் செய்திருக்கிறது. அதில் ஆர்யன் கான் மற்றும் மேலும் ஐந்து பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை.

இந்த ஆறு பேர் மீது குற்றங்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என ஸ்பெஷல் புலனாய்வு குழு அறிக்கை வெளியிட்டு உள்ளது. மீதம் இருக்கும் 20 பேர் மீது மட்டும் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US