திரிஷாவை மோசமாக பேசிய மன்சூர் அலிகான்.. மன்னிப்பும் கேட்கவில்லை.. மகளிர் ஆணையம் அதிரடி நடவடிக்கை
மன்சூர் அலிகான் - திரிஷா
நேற்று முன்தினம் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து மிகவும் மோசமான வகையில் பேசினார். இந்த விஷயம் வைரலாகி, பின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது நடிகை திரிஷாவிற்கு கவனத்திற்கு செல்ல, மன்சூர் அலிகானை வன்மையாக கண்டித்து அவர் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இதன்பின் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்ராஜ், சின்மயி, குஷ்பூ, சாந்தனு, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் மன்சூர் அலிகானுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
மேலும் நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இதில் நடிகர் மன்சூர் அலிகான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால், மன்சூர் அலிகான் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை.
மகளிர் ஆணையம் அதிரடி
இந்நிலையில், இந்திய தேசிய மகளிர் ஆணையம் தானாக முன் வந்த இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஆம், இந்த வழக்கில் ஐபிசி பிரிவு 509 B மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
