2 நாட்களில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
இளைஞர்களை கவரும் வகையில் காதல் கதைக்களத்தில் உருவான திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இப்படத்தை நடிகரும் இயக்குனருமான தனுஷ் இயக்கியிருந்தார்.
பா. பாண்டி மற்றும் ராயன் படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவான மூன்றாவது திரைப்படமாகும் இது. இப்படத்தின் மூலம் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.
மேலும் அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வசூல் விவரம்
கடந்த 21ம் தேதி வெளிவந்த இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இரண்டு நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 4.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
