திருமணம் ஆகி 13 வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை! போட்டோவை முதல் முறையாக வெளியிட்ட நீலிமா!

By Parthiban.A May 16, 2022 04:30 PM GMT
Report

திருமணம் ஆகி 13 வருடங்கள் கழித்து பிறந்த இரண்டாம் மகள் போட்டோவை இன்று முதல் முறையாக வெளியிட்டு இருக்கிறார் சீரியல் நடிகை நீலிமா ராணி. அவருக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கோலங்கள், மெட்டி ஒலி, வாணி ராணி போன்ற பல தொடர்களில் நடித்து இருப்பவர் நீலிமா. அவருக்கு சின்னத்திரையில் அதிகம் ரசிகர்களும் இருந்தனர். அவர் விஜய் டிவி சீரியல் ஒன்றில் நடித்து கொண்டிருந்த நிலையில் இரண்டாம் முறையாக கர்பமாக இருந்ததால் அதில் இருந்து விலகினார்.

அதன் பின் அவருக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது என்கிற அறிவிப்பு வந்ததும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.

திருமணம் ஆகி 13 வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை! போட்டோவை முதல் முறையாக வெளியிட்ட நீலிமா! | Neelima Esai Second Daughter Photos

இந்நிலையில் தற்போது முதல் முறையாக இரண்டாம் மகள் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார் அவர். மொத்த குடும்பத்துடன் அவர் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.

குழந்தைக்கு 'அத்வைதா இசை' என பெயர் சூட்டி இருப்பதாக தெரிவித்து இருக்கிறார் அவர்.

 

GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US