லட்சக்கணக்கில் சம்பாதித்த நீலிமா ராணி.. அப்பா செய்த அதிர்ச்சி செயலால் நடுத்தெருவுக்கு வந்த நடிகை
தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் நீலிமா ராணி. அதற்கு பிறகு அவர் பல முக்கிய படங்களில் அக்கா, அண்ணி, பிரென்ட் என சின்ன ரோல்களிலும் படங்களில் நடித்தார்.
சின்னத்திரை சீரியல்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் கடந்த வருடம் தான் இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொண்டார்.
அப்பா செய்த துரோகம்
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நீலிமா தனது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி விஷயங்கள் பற்றி பேசி இருக்கிறார். தான் சீரியல்களில் நடித்து மாதம் ஒரு லட்சம் ருபாய் சம்பாதித்து வந்த நேரத்தில் அதை அப்பாவிடம் தான் கொடுத்திருக்கிறார்.
ஆனால் அவர் அந்த பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு மொத்த பணத்தையும் இழந்துவிட்டாராம். ஒரு கட்டத்தில் கையில் எதுவும் இல்லாத நிலையில் நடுத்தெருவுக்கே வந்துவிட்டாராம் நீலிமா.
அதன் பின் தைரியமாக வாடகை வீட்டில் குடியேறி, வைராக்கியத்துடன் சம்பாதித்து தான் வாடகைக்கு இருந்த வீட்டையே வாங்கியதாக நீலிமா கூறி இருக்கிறார்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
