நீளிரா திரை விமர்சனம்

By Tony Apr 03, 2026 12:15 PM GMT
Report

கார்த்திக் சுப்புராஜ், ராணா தயாரிப்பில் இலங்கையை சார்ந்த சோமித்ரன் இயக்கத்தில் 1988-ல் இலங்கையில் போர் நடந்த போது ஒரு குடும்பம் அதை சிக்கிகொண்ட ஒரு நைட்டில் நடக்கும் கதையை படமாக்கியுள்ளனர், அது எந்தளவிற்கு உள்ளது? பார்ப்போம்.

கதைக்களம்

இலங்கையில் 1988-ல் ஒரு தமிழ் குடும்பம் தங்கள் மகள் திருமணத்திற்கு தயாராக வருகிறது, அந்த சமயத்தில் அந்த பகுதியில் போராளிகள் தாக்குதல் நடக்க போகிறது அறிந்து இந்திய ராணுவத்தினர் சிலர் அங்கு வருகின்றனர்.

அவர்கள் எங்களால் உங்களுக்கு பாதிப்பு இல்லை, என கூறிவிட்டு வெளியே போர்-க்கு தயாராக, அந்த நேரத்தில் தான் தெரிகிறது, சண்டை வேறு இடத்தில், இவர்கள் வந்த இடம் தவறு என, அதே நேரத்தில் போராளிகள் மிலிட்டரி இரண்டு கேம்ப்-களை அடித்து நொறுக்கிவிடுகின்றனர்.

நீளிரா திரை விமர்சனம் | Neelira Movie Review

அடுத்து நம்மை நோக்கி வருவார்கள் என, ராணுவத்தினர் அந்த திருமணம் நடக்கும் வீட்டிற்குள்ளேயே செல்கின்றனர், இவர்கள் இங்கு இருப்பது போராளிகளுக்கும் தெரிய வருகிறது.

அதன் பின்பு இந்த சண்டை, போர்-க்கு நடுவே அந்த குடும்பம் தப்பித்ததா? என்பதை பதட்டத்தின் உச்சியில் கூறியிருக்கும் படம் தான் நீளிரா.

படத்தை பற்றிய அலசல்

இலங்கை பின்னணியில் இதுவரை பல படங்கள் வந்துள்ளது , அதில் ஒரு சில படங்களே உண்மைக்கு அருகாமையில் இருக்கும் படங்கள், அப்படி ஒரு படமாக தான் இந்த நீளிரா வந்துள்ளது.

இந்தியன் ஆர்மி அந்த திருமண வீட்டிற்கு வந்தவுடனே அவர்களின் பதட்டம் நம்முடன் ஒட்டிக்கொள்கிறது, பல விஷயங்களை இயக்குனர் ராணுவ வீரர்கள் அந்த குடும்பத்தினர் உரையாடலில் பொட்டில் அடித்தார் போல் நமக்கு காட்டியுள்ளனர்.

இன்று இலங்கை என்று நீங்கள் சொன்னாலும் ஒரு காலத்தில் இந்தியாவிற்காக சண்டை போட்ட ஒரு தாத்தா, அவர் கதையை சொல்லி முடித்து, அப்போதெல்லாம் எல்லைகளே கிடையாது என சொல்வது போன்ற காட்சிகள் அழுத்தமாகவே உள்ளது.

அதோடு துப்பாக்கியால் ஒரு போதும் அமைதி கிடைக்காது, போர் என்பதே அமைதிகான ஒன்று என ராணுவத்தினர் சொல்ல, போர் என்றால் போர் தான் அதில் எங்கே அமைதி வந்தது போன்ற வசனங்கள் மனதை நெகிழ வைக்கிறது.

படத்தில் நடித்த அனைவருமே அத்தனை யதார்த்த நடிப்பை கொடுத்துள்ளனர், நவீன் சந்திரா ராணுவ வீரராக மக்களுக்கு நம்மால் எதும் ஆக கூடாது என சக வீரரிடம் பேசுவது, இப்படியான மனிதர்களால் பல மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பதை உணர்த்துகிறது.

அதோடு போராளிகள் 2,3 பேர் எப்படி 7-8 ராணுவ வீரர்களை சமாளித்தார்கள் போன்ற காட்சிகள் ஆச்சரியப்படுத்துகிறது. இப்படி படம் முழுவதும் சினிமாவை கொண்டாடுபவர்களுக்கு காட்சிகள் நிறைந்து உள்ளது.

டெக்னிக்கலாக ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் பிரமாதம்.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்களம்

நடிகர்கள் பங்களிப்பு

வசனங்கள்

டெக்னிக்கல் ஒர்க்

பல்ப்ஸ்

பெரிதாக ஏதுமில்லை

மொத்தத்தில் இந்த நீளிரா தூங்க விடாமல் சிந்திக்க வைக்கும் ஒரு உண்மையான படைப்பு.

ரேட்டிங்: 3.75/5  

 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US