நீங்கள் கேட்ட பாடல் புகழ் தொகுப்பாளர் விஜயசாரதியின் தந்தை இந்த பிரபல நடிகரா?- வைரலாகும் போட்டோ
விஜயசாரதி
சன் தொலைக்காட்சியில் 90களில் ஹிட்டாக ஓடிய நிகழ்ச்சிகளில் ஒன்று நீங்கள் கேட்ட பாடல்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜயசாரதியை யாராலும் மறக்க முடியாது. ஊர் ஊராக சென்று நேயர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு விருப்பமான பாடல் கேட்டு தொலைக்காட்சியில் போட்டு வந்தார்.
பின் சீரியல், படங்கள் என நடித்த இவர் இடையில் காணாமல் போய்விட்டார், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் படத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுநராக நடித்திருந்தார்.
இப்போது இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

பிரபலத்தின் அப்பா
விஜயசாரதியின் தாய் மற்றும் தந்தை வீட்டில் நடந்த ஒரு தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
அப்போது சின்ன பிள்ளையாக இருந்த விஜயசாரதி மற்றும் அவரது அக்காவை அவர்களின் அம்மாவின் அம்மா தான் வளர்த்தாராம்.
இதனை பல இடத்தில் விஜயசாரதி குறிப்பிட்டிருக்கிறார். விஜயசாரதி மறைந்த நடிகர் சசிகுமார் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் 4 நாட்களில் எதிர்பாராத அளவு செல்வத்தை கொடுக்கும் சுக்கிரன் பெயர்ச்சி- உங்களுக்கும் லக் இருக்கா? Manithan