இதுவரை எந்த ஒரு சீரியலிலும் நடக்காத விஷயம் - பிரமாண்டத்தின் உச்சத்தில் ஜீ தமிழ் சீரியல்
சின்னத்திரையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வகையில் சீரியல்களை ஒளிபரப்பு செய்துகொண்டிருக்கும் தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ்.
இதில் தற்போது செம்பருத்தி, யாரடி நீ மோஹினி, பூவே பூச்சூடவா, என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் மக்களை கவர்ந்துள்ளது.
இந்த சீரியல்களை போல் கடந்த ஒரு வருடமாக ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள சீரியல் தான், நடிகர் ஜெய் ஆகாஷ் நடித்து வரும் நீதானே என் பொன்வசந்தம்.
இந்நிலையில் தற்போது நீதானே என் போன்வசந்தம் சீரியலில் அடுத்ததாக காதல் காட்சி ஒன்று படமாக்க இருக்கிறது.
இதற்காக இதுவரை சின்னத்திரையில் செய்யாத பிரமாண்டமான விஷயத்தை செய்துள்ளனர்.
ஆம் முதல் முறையாக ஹெலிகாப்டரில் தனது கதாநாயகியை அழைத்து சென்று தனது காதலை கூறுகிறார் கதாநாயகன்.
அந்த வீடியோ இதோ..
நீங்கள் கண்டிராத பிரமாண்ட love proposal?❤️..இது வெறும் trailer தான், main picture-க்கு காத்திருங்கள்!?
— Zee Tamil (@ZeeTamil) April 24, 2021
நீதானே எந்தன் பொன்வசந்தம் | திங்கள் - சனி | இரவு 7.30 மணிக்கு#Neethaneenthanponvasantham #ZeeTamil
காணுங்கள், எப்போதும், எங்கேயும் Zee5ல! https://t.co/SKk44izYGU pic.twitter.com/amdWOA0Hlz