இது நீயா நானா ஷோவா, இல்ல 'சொல்வதெல்லாம் உண்மை' ஷோவா? கலாய்க்கும் நெட்டிசன்கள்
விஜய் டிவியில் கடந்த பல வருடங்களாக நடந்து வரும் நிகழ்ச்சி நீயா நானா. அதிக கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். வாரம்தோறும் எதாவது ஒரு வித்யாசமான டைட்டில் தேர்வு செய்து அதை பற்றி நிகழ்த்திலேயே அனுபவம் இருப்பவர்கள் இருதரப்பாக விவாதிப்பார்கள்.
இந்த வார ப்ரோமோ தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. கிராமத்து சம்பந்தி vs நகரத்து சம்பந்தி ஆகியோரிடையே தான் விவாதம்.
நகரத்து பெண்ணை திருமணம் செய்துகொண்டு மகன் கிராமத்துக்கு வருவதே இல்லை, எப்போதாவது விருந்தாளி போல வந்து செல்கிறான் என கிராமத்து அப்பா குற்றம்சாட்டுகிறார்.
சென்னையில் தான் இருக்க வேண்டும், வீடு வாங்கி செட்டில் ஆக வேண்டும் என திருமணத்தின்போதே ஒப்பந்தம் போட்டாகிவிட்டது. இல்லை என்றால் நான் பெண்ணே கொடுத்திருக்க மாட்டேன் என நகரத்து அப்பா மல்லுகட்டுகிறார்.
இப்படி இருவரும் சண்டை போட்டுக்கொண்டிருக்க கோபிநாத் பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் 'இது நீயா நானா ஷோவா இல்லை சொல்வதெல்லாம் உண்மை ஷோவா?' என கேள்வி கேட்டு கலாய்த்து வருகிறார்கள்.