ஜெயிலர் 2 படம் குறித்து ஹைப் ஏற்ற விரும்பவில்லை.. ஓப்பனாக சொன்ன நெல்சன்!
ஜெயிலர்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது.
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
அடுத்த ஆண்டு வெளிவரவிருக்கும் ஜெயிலர் 2 படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
ஓபன் டாக்!
இந்நிலையில், ஜெயிலர் 2 படம் குறித்து இயக்குநர் நெல்சன் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " இப்போதே ஜெயிலர் 2 படம் குறித்து ஓவராக ஹைப் ஏற்றி பேச விரும்பவில்லை. அப்படம் என்ன செய்ய போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். ஒரு வேளை படம் சொதப்பிவிட்டால் மக்கள் Waste என சொல்லிவிடுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.