பிலடி பெக்கர் திரைப்படத்தின் வசூல்.. நெல்சன் திலிப்குமார் எடுத்த அதிரடி முடிவு
பிலடி பெக்கர்
தீபாவளி பண்டிகை அன்று கவின் நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பிலடி பெக்கர். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் இயக்கியுள்ளார்.
மேலும் நெல்சன் திலிப்குமார் அவரின் 'பிலமண்ட் பிக்சர்ஸ்' நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான முதல் படம் 'பிளடி பெக்கர்' என்பது குறிப்பிடத்தக்கது.
கவினுடன் இணைந்து இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்சயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதில் கவின் 'பிச்சைக்காரன்' கதாபாத்திரத்தில் மிகவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இருப்பினும் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
நெல்சன் திலீப்குமார் முடிவு
இந்நிலையில், பிலடி பெக்கர் படத்தின் தமிழக உரிமையை வாங்கி விநியோகித்த பைவ் ஸ்டார் நிறுவனத் தயாரிப்பாளர் கதிரேசனுக்கு சுமார் ரூ.7 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அந்த நஷ்டத்தில் இருந்து ரூ. 5 கோடியை நெல்சன் திரும்ப கொடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார் என கூறப்படுகிறது.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
