பீஸ்ட் மோசமான விமர்சனங்களுக்கு நெல்சன் செம்ம கூல் பதில்
நெல்சன் திலிப்குமார் படங்கள்
கோமளவு கோகிலா படத்தை இயக்கி தமிழில் அறிமுகமானவர் இயக்குனர் நெல்சன் திலிப்குமார்.
இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து டாக்டர் படத்தை இயக்கினார். இந்த இரு திரைப்படங்களும் சூப்பர்ஹிட்டானது.
இப்படங்களை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். விஜய் நடிப்பில் வெளிவந்த இப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியுள்ளது. இதனால், இப்படம் தோல்வியை சந்தித்துள்ளது.

நெல்சன் கூல் பதில்
இதனால், இப்படம் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும், பீஸ்ட் படம் குறித்து பல விதமான மோசமான விமர்சனங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய நெல்சன் " நாம் ஒன்று எதிர்பார்த்து அனைவருக்கும் பிடிக்கும் என்று செய்தோம். அது நடக்கவில்லை. சரி, அடுத்த படத்தை அனைவருக்கும் பிடிக்கும்ப்படி எடுப்போம் " என்று ஸ்டண்ட் மாஸ்டர்களிடம் நெல்சன் கூறியுள்ளாராம்.

பீஸ்ட் படம் குறித்து மோசமாக பேசி வரும் பலருக்கும் இயக்குனர் நெல்சன் தனது ஸ்டைலில் கூலாக பதில் கூறியுள்ளார்.