மாபெரும் தோல்வியடைந்த பீஸ்ட் படம்.. ஆனாலும், கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்திய இயக்குனர் நெல்சன்

Report

நெல்சன் திலிப்குமார்

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலிப்குமார். இதன்பின், சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் எனும் சூப்பர்ஹிட் படத்தை கொடுத்தார்.

தொடர்ந்து தளபதி விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் கைகோர்த்தார். இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர். ஆனால், அதையெல்லாம் கொஞ்சம் கூட பூர்த்தி செய்யாத அளவிற்கு அமைத்தது பீஸ்ட்.

மாபெரும் தோல்வியடைந்த பீஸ்ட் படம்.. ஆனாலும், கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்திய இயக்குனர் நெல்சன் | Nelson Dhilpkumar Increased His Salary After Beast

வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், விமர்சன ரீதியாக மாபெரும் தோல்வியை பீஸ்ட் சந்தித்துள்ளது. இப்படத்திற்காக இயக்குனர் நெல்சன் ரூ. 8 கோடி சம்பளமாக வாங்கியிருந்தார் என்று தகவல் வெளியானது.

சம்பளத்தை உயர்த்தினாரா

பீஸ்ட் படத்தை தொடர்ந்து, மீண்டும் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் கைகோர்த்து ரஜினியை இயக்குகிறார் நெல்சன். இந்நிலையில், இப்படத்திற்காக இயக்குனர் நெல்சன் திலிப்குமார் ரூ. 20 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாபெரும் தோல்வியடைந்த பீஸ்ட் படம்.. ஆனாலும், கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்திய இயக்குனர் நெல்சன் | Nelson Dhilpkumar Increased His Salary After Beast

பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பின், ரூ. 12 கோடி தனது சம்பளத்தில் உயர்த்திவிட்டாரா நெல்சன் என்று பலரும் பேசி வருகிறார்கள். ஆனால், இப்படத்திற்காக அவர் எத்தனை கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று இதுவரை உறுதியாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US