இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணையும் நயன்தாரா.. வேற லெவல் கூட்டணி
நயன்தாரா
ஜவான் படத்திற்கு பின் நயன்தாராவிற்கு இந்தியளவில் நல்ல வரவேற்பு கிடைத்துவிட்டது. இப்படத்தின் வெற்றியின் காரணமாக புதிய ஹிந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கூட நயன்தாராவிற்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி, மண்ணாங்கட்டி, டெஸ்ட் ஆகிய படங்கள் உருவாகி வரும் நிலையில், ஹிந்தியிலும் நயன்தாராவை தேடி கதைகள் வருகிறதாம்.
நடிகை நயன்தாராவின் சோலோ நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று கோலமாவு கோகிலா. இப்படத்தின் வெற்றிக்கு பின் நயன்தாராவிற்கு மிகப்பெரிய மார்க்கெட் திரையுலகில் ஓப்பன் ஆனது என்று கூட சொல்லலாம்.
புதிய திட்டத்தில் இருந்த கதிர், வேறொரு பிளான் போட்டு அவரை தூக்கிய ஜீவானந்தம்- பரபரப்பு எதிர்நீச்சல் புரொமோ
ஹிட் கூட்டணி
இந்நிலையில், தனக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்த இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் மீண்டும் இணைய நயன்தாரா முடிவு செய்துள்ளாராம்.
ஜெயிலர் எனும் மாபெரும் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்துள்ள நெல்சனுடன் மீண்டும் இணையும் நயன்தாரா கோலமாவு கோகிலா இரண்டாம் பாகம் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக அதிக வாய்ப்புகள் என்றும் கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அறிவிப்பு வெளியாகிறதா என்று.