ஜெயிலர் 2 படத்திற்காக இயக்குனர் நெல்சனுக்கு பேசப்பட்டுள்ள இத்தனை கோடியா.. எவ்ளோ தெரியுமா?
நெல்சன்
கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் நல்ல வசூல் குவித்து தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை பெற்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் இயக்கிய முந்தைய படம் பீஸ்ட் சில எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து இருந்த நிலையில், ஜெயிலர் படம் அவருக்கு நல்ல கம்பேக்காக இருந்தது.
சம்பளம்
தற்போது ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. கூலி படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு, ரஜினிகாந்த் ஜெயிலர் 2 -வில் இணைவார் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பெரிய பொருட் செலவில் உருவாகும் ஜெயிலர் 2 படத்திற்காக இயக்குனர் நெல்சனுக்கு ரூ 60 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது.

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
