ஜெயிலர் 2 குறித்து பேசி ஹைப் ஏத்த விரும்பவில்லை.. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஓபன் டாக்
ஜெயிலர் 2
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது.
உலகளவில் ரூ. 620 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டு வெளிவரவிருக்கும் ஜெயிலர் 2 படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
நெல்சன் ஓபன் டாக்
இந்த நிலையில், சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட நெல்சன் ஜெயிலர் 2 படம் குறித்து பேசியுள்ளார்.
இதில், "ஜெயிலர் படம் போலவே ஜெயிலர் 2 படமும் மிக சிறப்பாக வந்துள்ளது. என்றாலும் கூட இந்த படம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று இப்போதே என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால், கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக இருக்கும்" என்றார்.
மேலும் பேசிய அவர், "இப்போதே ஜெயிலர் 2 படம் குறித்து ஓவராக ஹைப் ஏற்றி பேச விரும்பவில்லை. ஏற்கனவே ஜெயிலர் 2 படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நேரத்தில் நானும் இன்னும் ஹைப்பை ஏற்றும் வகையில் பேச வேண்டாம் என நினைக்கிறன். அப்படி நானும் பேசினால் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து விடும்" என கூறியுள்ளார்.