விஜய் டிவியில் நெல்சன் இயக்கிய சூப்பர் டூப்பர் ஹிட் ஷோக்கள்.. என்னென்ன தெரியுமா?
நெல்சன்
இன்றைய தேதியில் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியளவில் முக்கிய இயக்குநராக இருப்பவர் நெல்சன் திலீப்குமார். இவர் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் சற்று கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
இதனால் நெல்சன் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதனை ஜெயிலர் படத்தின் மூலம் தகர்த்தெறிந்து இன்று முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.
அதுமட்டுமின்றி இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.
என்னென்ன தெரியுமா?
இந்நிலையில், சினிமாவை தாண்டி நெல்சன் சின்னத்திரையிலும் பல சாதனைகளை படைத்துள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
ஆம், அவர் விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியை தான் முதலில் இயக்கினார். இந்த நிகழ்ச்சி அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்று சாதனை படைத்தது.
மேலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சில சீசன்களை நெல்சன் இயக்கியுள்ளார். அதை தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை இயக்கி இருக்கிறார். அதுமட்டுமின்றி, விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியையும் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
