பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற விக்ரம் திரைப்படம் ! சம்மந்தமே இல்லாமல் விமர்சிக்கப்படும் நெல்சன்..
விமர்சிக்கப்படும் இயக்குனர் நெல்சன்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம்.
கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்த விக்ரம் திரைப்படம் இன்று வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
கமலுடன் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ள விக்ரம் படம் ரசிகர்களுக்கு பயங்கர ஆக்ஷன் விருந்தாக அமைந்துள்ளது.
இந்நிலையில் நெட்டிசன்கள் விக்ரம் படத்திற்கு வாழ்த்து மழையை பொழிந்து வரும் அதே சமயத்தில் இயக்குனர் நெல்சனை சம்மந்தமே இல்லாமல் விமர்சித்து வருகின்றனர்.
ஆம், லோகேஷ் இயக்கிய விக்ரம் சிறந்த விமர்சனங்களை பெற்று வருவதால் பீஸ்ட் படத்தை என் அப்படி எடுக்கவில்லை என விமர்சித்து வருகிறார்கள் ரசிகர்கள்.


