நெல்சனிடம் இருந்து கைநழுவிய வாய்ப்பு ! அவருக்கு பதிலாக தலைவர் 169 படத்தை இயக்கும் இயக்குனர்..
பீஸ்ட்
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த பீஸ்ட் திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்து தற்போது வசூலில் சொதப்பி வருகிறது.
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் முன்பே நெல்சன் அடுத்து ரஜினியின் 169 படத்தை இயக்கவுள்ளதை அறிவித்துவிட்டனர்.

கைநழுவிய வாய்ப்பு
மேலும் தற்போது பீஸ்ட் திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற தொடங்கியதில் இருந்து ரஜினியின் 169 படம் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.
இதனிடையே தற்போது சன் பிக்சர்ஸ் தொடர்ந்து நெல்சனுடன் பணிபுரிவது குறித்து யோசித்து வருகிறார்களாம். இதனால் நெல்சனுடன் பணியாற்றுவது குறித்த முடிவை ரஜினியிடமே கொடுத்துவிட்டார்களாம் சன் பிக்சர்ஸ்.
அப்படி நெல்சன் ஓகே இல்லை என்றால், ரஜினியின் 169 படத்தை இயக்கும் வாய்ப்பு அட்லீ அல்லது தேசிங்கு பெரியசாமிக்கு போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

சொந்த ஊரில் புதிய வீடு கட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்- வெளிவந்த கலக்கல் புகைப்படங்கள்