தளபதி விஜய்யே எடுத்த போட்டோ, முக்கிய பிரபலம் பதிவிட்ட புகைப்படம்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
பிரமாண்டமாக உருவாகிவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் வெவ்வேறு இடங்களில் நடைபெற்றது, மேலும் சென்னையில் பெரிய மால் செட் போட்டு அங்கு படப்பிடிப்பு நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று இப்படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் தனது படப்பிடிப்பை முடித்துள்ளதாக வீடியோவுடன் அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் நெல்சன் அவரின் சமூக வலைதள பக்கத்தில் நடிகர் விஜய்யின் மேனேஜரான ஜெகதீஷுக்கு பிறந்தநாள் என்பதால் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த புகைப்படத்தை தளபதி விஜய் தான் எடுத்தார் என்றும் குறிப்பிட்டு, அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் நெல்சன்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
Happiest birthday @Jagadishbliss ???? have a great year ? photo courtesy @actorvijay sirrr ? pic.twitter.com/LXHpswSq0n
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) December 11, 2021