ரஜினி வீட்டுக்கு லேட்டாக போக இவர்தான் காரணம்.. உண்மையை சொன்ன நெல்சன்
நெல்சன்
ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படம் தற்போது பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூல் குவித்துக்கொண்டிருக்கிறது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் பல சாதனைகளை படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி நெல்சன் கதை சொல்ல குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் லேட்டாக வந்தார் என கூறி இருந்தார். வந்தபின் நல்ல காபி இருந்தா கொடுங்க என கேட்டார் என்றும் அவர் கூறி இருந்தார்.

காரணம்
இந்நிலையில் தற்போது இந்த விஷயம் பற்றி நெல்சன் விளக்கம் அளித்து இருக்கிறார். இதற்கு காரணம் அனிருத் தான் என அவர் கூறி இருக்கிறார்.
அனிருத் எப்போதும் இரவில் தான் வேலை செய்வார். அதிகாலை 4 மணிக்கு அவர் ஸ்டுடியோவில் இருந்து கிளம்பும்போதே 'என்ன இவ்ளோ சீக்கிரம் போறீங்க' என கேட்பார்.
அப்படி இரவு முழுக்க தூங்காமல் வேலை செய்வதால் தான் அன்று ரஜினிக்கு கதை சொல்ல லேட்டாக போனதாக நெல்சன் பேட்டியில் கூறி இருக்கிறார்.

பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri