பீஸ்ட் கிளைமாக்ஸில் முக்கிய காட்சியை வெட்டிய நெல்சன்! இப்படி ஒரு சீன் இருந்ததா
விஜய்யின் பீஸ்ட் படம் கடந்த 13ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. படத்தில் எதிர்பார்த்த அளவுக்கு திரைக்கதை இல்லை என்று தான் மோசமான விமர்சனங்களை அது சந்தித்தது.
பீஸ்ட்
ரா ஏஜென்ட் வேலையை விட்டுவிட்டு வெளியில் வரும் விஜய் அதன் பிறகு மனோதத்துவ நிபுணரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். அதன் பின் விடிவி கணேஷின் செக்யூரிட்டி எஜென்சி மூலமாக மால் ஒன்றிற்கு செல்கிறார். அங்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஹிஜாக் செய்ய மக்களை விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.
மக்களை காப்பாற்றுவது மட்டுமின்றி கிளைமாக்சில் விஜய் பாகிஸ்தான் தீவிரவாத முகாமுக்குள் புகுந்து வில்லனை இந்தியாவுக்கு கூட்டி வருவார்.
வெட்டப்பட்ட காட்சி
ஆனால் உண்மையில் கிளைமாக்ஸ் சீனிற்கு முன்பு விஜய் எப்படி தீவிரவாத முகமை கண்டுபிடிக்கிறார். அங்கு எப்படி சென்று ட்ரைனிங் பெறுவதற்காக சேருகிறார் என்பது போன்ற காட்சிகள் இருந்ததாம். ஆனால் படத்தின் நீளத்தை குறைப்பதற்காக நெல்சன் அந்த காட்சிகளை நீக்கி இருக்கிறார்.
அந்த காட்சிகளின் ஸ்டோரி போர்டு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
The Original Storyboard Of #Beast Climax Sequence.
— Vimal Kumar (@Kettavan_Freak) April 19, 2022
© Ezhil Fernandas@actorvijay @Nelsondilpkumar (1/4) pic.twitter.com/6bga81LCKx
சன் டிவியின் நம்பர் 1 சீரியல் இதுதான்! லேட்டஸ்ட் டிஆர்பி ரேட்டிங்

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
