ஜெயிலர் கதை விக்ரம் மாதிரியே இருக்கே.. அப்போதே நெல்சனிடமே கூறிய லோகேஷ்
ஜெயிலர் படம் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வசூல் குவித்தது. இயக்குனர் நெல்சன் மட்டுமின்றி சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும் இந்த படம் பெரிய கம்பேக் ஆக அமைந்தது.
படம் மிகப்பெரிய லாபம் கொடுத்ததால் ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் சொகுசு கார்களை பரிசாக கொடுத்தது.

கதை பற்றி விமர்சித்த லோகேஷ்
ஜெயிலர் படம் ரிலீஸ் ஆன பிறகு அதன் கதை லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம் போலவே இருக்கிறது என நெட்டிசன்கள் விமர்சித்தனர். அந்த விமர்சனம் பற்றி நெல்சன் ஒரு பேட்டியில் விளக்கம் அளித்து இருக்கிறார்.
நான் ஆரம்பத்திலேயே ஜெயிலர் கதையை லோகேஷிடம் கூறினேன், 'நீ விக்ரம் பாத்தியா..' என அவர் அப்போது கேட்டார்.
'ஆரம்பிப்பது ஒரு இடத்தில் இருந்தாலும், இரண்டு கதைகளும் வெவ்வேறு இடங்களுக்கு செல்கின்றன. கதையை மாற்ற வேண்டும் என எதையாவது செய்து குழப்ப விரும்பவில்லை.'
'ஆரம்பிப்பது ஒரு இடத்தில் இருந்தாலும், இரண்டு கதைகளும் வெவ்வேறு இடங்களுக்கு செல்கின்றன. கதையை மாற்ற வேண்டும் என எதையாவது செய்து குழப்ப விரும்பவில்லை.'

பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri