8 வருடங்களுக்கு முன்பே தளபதி விஜய் படம் குறித்து பதிவிட்ட பீஸ்ட் இயக்குனர் நெல்சன் !
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெல்சன் இயக்கத்தில் இதுவரை வெளியாகியுள்ள கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படம் பெரிய ஹிட்டாகியுள்ளதால், பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு உள்ளது.
இந்நிலையில் இயக்குனர் நெல்சன் தளபதி விஜய்யின் ரசிகர் என்பது தெரிந்த விஷயம். அதன்படி அவர் பல வருடங்களுக்கு முன்பு தளபதி விஜய் படம் குறித்து பதிவிட்டுள்ளது தற்போது வைரலாகியுள்ளது.
ஆம், தளபதி விஜய் AR முருகதாஸ் கூட்டணியில் வெளியான கத்தி படம் குறித்து தான் நெல்சன் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவை நீங்களே பாருங்கள்..
