சிம்பு மற்றும் நயன்தாராவுடன் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன், இதுவரை பலரும் பார்த்திராத போட்டோ..
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தற்போது தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
இவர் இயக்கத்தில் முதலில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படம் மிக சிறந்த விமர்சங்களை பெற்று வெற்றியடைந்தது.
அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான டாக்டர் திரைப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியடைந்தது.
மேலும் 100 கோடி வசூலித்த திரைப்படத்தை இயக்கிய நெல்சன் அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறித்து அனைவரும் அறிந்த விஷயம்.
இந்நிலையில் நெல்சன் இயக்குனராக சிம்புவின் வேட்டைமன்னன் படத்தின் மூலமாக தான் அறிமுகமாகி இருக்க வேண்டியது, ஆனால் அப்படம் பாதியிலே நின்று போனது.
இதனிடையே இயக்குனர் நெல்சன் சிம்பு மற்றும் நயன்தாராவுடன் வல்லவன் படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..