உடைந்தது சஸ்பென்ஸ்.. இவங்களுக்கு தான் மணப்பெண், மணமகன் தேவை - வைரல் போஸ்டருக்கு கிடைத்த பதில்.!!
ஒரு விஷயத்தை பிரபலப்படுத்துவற்காக அல்லது விளம்பரப்படுத்துவற்காக சுவரொட்டிகள் ஒட்டப்படுவது வழக்கமான ஒன்று. அந்த காலம் முதல் தற்போது வரை போஸ்டர் ஒட்டும் பழக்கம் தமிழகத்தில் பரவலாக இருந்து வருகிறது.
சில சமயங்களில் சஸ்பென்ஸ் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்படுவதும் வழக்கம். சமீபத்தில் கூட நீங்க ரோடு ராஜாவா என்ற பெயரில் தமிழக காவல்துறை தரப்பில் போஸ்டர்களும் வீடியோக்களும் வெளியிடப்பட்டு இருந்தன. பிறகு தான் சாலை விதிகளை மீற கூடாது என்ற விழிப்புணர்வுக்கான விளம்பரம் என்பது தெரிய வந்தது.
அதே போல் கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேவை, திருமணத்திற்கு பெண் தேவை என்ற கேப்ஷனுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. எதுக்குடா இந்த போஸ்டர் என்ற கேள்வியையும் எழுப்ப வைத்தது. மேலும் அந்த போஸ்டரில் QR கோட் ஒன்றும் கொடுக்கப்பட்டு இருக்க அதை ஸ்கேன் செய்து உள்நுழைந்தால் ஸ்கேன் செய்தமைக்கு நன்றி. மாப்பிள்ளையின் பெயர் சிவாஜி, தி பாஸ். வயது 42 எனவும் பெண்ணின் பெயர் மதுமிதா, வயது 35 எனவும் மணப்பெண் மற்றும் மணமகனின் முழு விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.
அதாவது இது ஜீ தமிழில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள நெஞ்சத்தை கிள்ளாதே என்ற புத்தம புதிய சீரியலுக்கான ப்ரமோஷன் போஸ்டர் என தெரிய வந்துள்ளது.
ஹீரோவாக ஜெய் ஆகாஷ் தான் 45 வயதானவராக கௌதம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உணவு பிரியரான அவருக்கு உடல் எடை கூடி பெண் கிடைக்காமல் இருக்கிறது.
அதேபோல் மதுமிதா என்ற கதாபாத்திரத்தில் 35 வயது நிரம்பிய பெண்ணாக ரேஷ்மா நடிக்கிறார் என அறிவித்துள்ளனர். மேலும் இவர்களுக்கு தான் மணப்பெண், மணமகன் தேவை.. வாங்க சேர்ந்து தேடலாம் என புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதுக்கா இவ்வளவு பில்டப்? இதெல்லாம் பார்த்தா சீரியல் தரமா இருக்கும் போலயே என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்