நடிகர் நெப்போலியன் மருமகள் அக்ஷயா எங்கே.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வீடியோ
நடிகர் நெப்போலியன் மகன் தனுஷுக்கும் அக்ஷயா என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் நவம்பரில் திருமணம் நடைபெற்றது. ஜப்பானில் திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்கள் பல நாடுகளுக்கு அதன் பிறகு சென்று இருந்தார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் நெப்போலியன் தன் வீட்டுக்கு பல பிரபலங்களை கூட்டி சென்று மகன் தனுஷை சந்திக்க வைத்து இருந்தார். பரிதாபங்கள் கோபி சுதாகர், மத்தம்பட்டி ரங்கராஜ், தொழிலதிபர் ஆதித்யராம் உள்ளிட்ட பலர் சென்று இருந்தனர்.
அந்த வீடியோக்களில் தனுஷ் மட்டுமே இருந்தார், மருமகள் அக்ஷயா இல்லை. அதனால் அவர் எங்கே போனார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் நெப்போலியன் மகன் ஒல்லியாகி எலும்பும் தோலுமாக மாறிவிட்டதாகவும் பலரும் விமர்சித்தனர்.
முற்றுப்புள்ளி
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நெப்போலியன் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
மருமகள் அக்ஷயா வீட்டுக்கு வந்ததை மொத்த குடும்பமும் கொண்டாடி இருக்கின்றனர். அந்த வீடியோவை பாருங்க.