விஜய்-சூர்யாவுடன் நேருக்கு நேர் படத்தில் நடித்த இந்த நாயகியை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி இருக்கார் பாருங்க
நேருக்கு நேர்
தமிழில் 1997ம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் விஜய்-சூர்யா நடிக்க வெளியான திரைப்படம் நேருக்கு நேர்.
தேவா இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களுமே செம ஹிட்.
இந்த படத்தில் முதலில் சூர்யாவிற்கு பதில் அஜித் நடித்து வந்துள்ளார், ஆனால் என்ன காரணம் என தெரியவில்லை படத்தில் இருந்து பாதியில் வெளியேறி இருக்கிறார்.
அந்த காலத்தில் நடந்த இந்த கூட்டணி இப்போது நடக்குமா என்றால் சந்தேகம் தான்.
பிரபல நடிகை
இந்த படத்தில் நடிகர் ரகுவரனுக்கு ஜோடியாக நடித்தவர் சாந்தி கிருஷ்ணா.
1981ல் தமிழில் வெளியான சிவப்பு மல்லி என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார்.
அதன்பின் மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல், பன்னீர் புஷ்பங்கள் என தொடர்ந்து படங்கள் நடித்தார். நேருக்கு நேர் படத்தில் நடிகர் ரகுவரனுக்கு ஜோடியாக நடித்தார்.
தற்போது மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இதோ அவரது லேட்டஸ்ட் புகைப்படம்,