அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் ஜவான் படத்தை கைப்பற்றிய ஓடிடி நிறுவனம்.. எத்தனை கோடிகளுக்கு தெரியுமா
ஜவான் திரைப்படம்
பிகில் படத்திற்கு பிறகு அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஜவான். இப்படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார்.
மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் யோகி பாபு நடிக்கிறார். இவர்கள் மட்டுமின்றி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் தீபிகா படுகோன் மற்றும் தளபதி விஜய் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஓடிடி-யில் ஜவான்
இந்நிலையில், ஜவான் படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[YHH0JF ]
திரையரங்கில் படம் வெளிவந்து சில வாரங்கள் கழித்து நெட்பிளிக்ஸ் ஜவான் திரைப்படம் ஓடிடி-யில் வெளியிடவேண்டும் என்ற அடிப்படையில் இப்படத்தை ரூ, 120 கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan