Netflix-ல் தவறவே விடக்கூடாத 'Frankenstein' திரை விமர்சனம்
ஹாலிவுட்டில் வித்தியாச கதைக்களத்திற்கு பஞ்சமே இருக்காது, அப்படி செம வித்தியாச கதைக்களத்தில் Netflix-ல் வெளிவந்துள்ள Frankenstein படம் எப்படியுள்ளது பார்ப்போம்.

கதைக்களம்
விக்டர் என்ற விஞ்ஞானி படத்தின் ஆரம்பத்திலேயே உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஒரு கப்பல் நோக்கி ஓடி வருகிறார். அவரை பின் தொடர்ந்து ஒரு ராட்சஸ உருவம் வர, அதை அந்த கப்பலில் இருந்தவர்கள் சுடுகின்றனர்.
ஆனால், அந்த ராட்சனுக்கு அந்த காயமெல்லாம் மறைந்து அந்த விக்டர் வேண்டும் என துரத்த, அந்த ராட்சனை தண்ணிருக்குள் தள்ளிவிட்டு தற்காலிக நிம்மதியடைகின்றனர்.

அந்த நேரத்தில் விக்டர் தன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார், அந்த ராட்சனை உருவாக்கியதே விக்டர் தான், இறந்த உடல்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒட்ட வைத்து ஒரு உயிரை உருவாக்குகிறார்.
உருவாக்கிய அந்த உயிர்க்கு எந்த கருணையும் கிடைக்கவில்லை அவரிடமிருந்து, அதன் பிறகு விக்டரையே கொல்லும் அளவிற்கு அந்த ராட்சன் எப்படி மாறினாம் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
Guillermo del Toro பல பிரமாண்ட படங்களை இயக்கிய இவர் இம்முறை ஹியுமன் எமோஷன் என்ற களத்தை கையில் எடுத்து விளையாண்டுள்ளார், கிட்டத்தட்ட நம்ம ஊர் எந்திரன் களம் போலவே தான் தெரியும்.
ஆனால், சில மனிதர்கள் எவ்வளவு மோசமானவர்கள் சில மனிதர்களால் அன்பு எப்படி பரவுகிறது என்பதை செம அழுத்தமாக கூறியுள்ளார்.

விக்டர் சிறு வயதில் தந்தையின் கண்டிப்பில் வளர, அவர் வளர்ந்து அன்பை போதிப்பார் என்று பார்த்தால், தான் உருவாக்கிய ஒரு கிரியேட்சர்-யை தானே கொடுமை படுத்துவது அவர் அப்பாவாகவே மாறுகிறார்.
மனிதன் மிருகமாகிறாம், பிண குவியலிலிருந்து உருவாக்கிய உயிர் அன்பை நாடுகிறது போன்ற காட்சியமைப்புக்கள் ரசிக்க வைக்கிறது.

அதிலும் அந்த ராட்சன் ஒரு குடும்பத்திற்கு சென்று அங்கு அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பது, கண் தெரியாத தாத்தா ஒருவர் காட்டும் அன்பால் மாறுவது அங்கு வரும் வசனங்கள் எல்லாம் அத்தனை அருமை.
டெக்னிக்கலாவும் குறிப்பாக மனித பாகங்களை காட்டும் சிஜி வேலைகள் மிரட்டல்.
க்ளாப்ஸ்
கதை, திரைக்கதை.
வசனங்கள்.
டெக்னிக்கல் ஒர்க்.
பல்ப்ஸ்
மனித பாகங்களை காட்டும் காட்சி, இளகிய மனமுள்ளவர்கள் தவிர்க்கலாம்.
மொத்தத்தில் மனிதனோ, மிருகமோ, ராட்சனோ அன்பு தான் எல்லோருக்குமான முன்னோடி என்பதை காட்டிய விதத்திற்கே சல்யூட்.
