படத்திற்கு நல்ல வரவேற்பு.. ஆனால், நெட்டிசன்களிடம் திட்டு வாங்கும் நடிகர் ஜீவா.. காரணம் என்ன
தலைவர் தம்பி தலைமையில்
நடிகர் ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தலைவர் தம்பி தலைமையில் படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 11+ கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு நல்ல முதல் வார வசூலாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், மறுபக்கம் இப்படத்தின் ஹீரோ ஜீவாவை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகிறார்கள்.
சர்ச்சைக்குள்ளான வசனம்
தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்தின் இறுதி காட்சியில், 'படிச்சு படிச்சு சொன்னானே டா கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணுடா பண்ணுங்கடானு கேட்பீங்களா' என்கிற வசனம் இடம்பெறும்.

இந்த வசனத்தை நடிகர் ஜீவா, தான் விசிட் அடிக்கும் திரையரங்கில் நகைச்சுவையாக பேசியதை கண்டித்து நெட்டிசன்கள் திட்டி வருகிறார்கள். 41 பேர் உயிரிழந்த சமயத்தில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கண்கலங்கி பேசிய ஒரு விஷயத்தை இப்படியா நகைச்சுவையாக்குவது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கிரீன்லாந்திற்கு துருப்புகளை அனுப்பும் கனடா: நேட்டோ உடன் கூட்டு ராணுவ பயிற்சிக்கு திட்டம் News Lankasri